அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவாக முடியாதென்பதால், அவருக்கு வாக்களிப்பதில் பிரயோசனம் இல்லை
தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய, எதிர்வரும் 16ஆம் திகதி தானும் தனது வாக்கை அவருக்கு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டில் 4 முதல் இலட்சம் வாக்குகள் இருக்கின்றன. இளைஞர்கள், இவர்களும் வேண்டாம் அவர்களும் வேண்டாம் என நினைத்து மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்தால், நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் அவர்களின் வாக்கு ஆற்றில் வீசிய அரிசி போல் ஆகிவிடும்.
நாட்டுக்கும், மதத்திற்கும், இனத்திற்கு அந்த வாக்குகள் பெறுமதியாக இருக்காது. அநுரகுமாரவின் பேச்சுகளை நானும் விரும்புகிறேன். நோக்கம், கொள்கை என்பது சிறந்தவை.
நவம்பர் 16ஆம் திகதி சிறந்த பேச்சுக்கு வாக்களிக்கும் தினமல்ல. நாங்கள் நாட்டின் தலைவரை தெரிவு செய்ய போகிறோம். நவம்பர் 16ஆம் திகதி அநுரகுமார ஜனாதிபதி தெரிவாக முடியுமாயின் நானும் அவருக்கு உதவி செய்வேன்.
ஜனாதிபதியாக தெரிவானால், அவர் கூறுவதை செய்ய முடியும். ஜனாதிபதியாக தெரிவாக முடியாது என்றால், நாம் அளிக்கும் வாக்குகளில் பிரயோசனம் இல்லை என துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் கடந்த நாலு வருடங்களுக்கு முன் பேசிய பேச்சுக்கும் இப்போது பேசும் பேச்சுக்கும் வித்தியாசம் பார்க்கும் போது சிரிப்பாய் உள்ளது
ReplyDeleteGood point.....! Muslims should realise this. Voting to Anura Kumara favoured to Gota.
ReplyDeleteஇறைவன் தீர்மானம் எது என்று யாராலும் சொல்ல முடியாது எதிர்பார்க்காத,நடக்கவே முடியாது என்று மனிதன் நினைப்பதை நடத்திக்காட்டுபவன் தான் இறைவன்(அல்லாஹ்) அனுர ஜனாதிபதி ஆக முடியாது என்று கூறும் உரிமை மனிதர்களுக்கு இல்லை., ஆனாலும் சிறுபான்மை மக்கள் அனுராவை தீர்மானித்தல் எதிர் காலத்தில் சிறப்புக்குரியதாக இருக்க வாய்ப்புகள் அதிகம், அனுர காலத்தின் தேவை மற்றவர்கள் கடனை அதிகரிக்க துணை நிற்பார்கள் அனுரவின் கூட்டு (NPP) கடனை குறைத்து உற்பத்திகளை அதிகரிக்க துணை நிற்பார்கள் இளசுகளே,சிந்திக்கும் திறன் கொண்டவர்களே இதுவரை கொள்ளைத்தனம்,கள்ளத்தனம் அற்றவர் யார் என்று பாருங்கள் அதன் பின்பு நவம்பர் 16 ஐ எப்படி தீர்மானிக்க வேண்டுமென்று சிந்தியுங்கள்
ReplyDeleteடெபாசிட் இல்லாமல் செல்லும் உங்களுக்கு இந்த கவலை கட்டாயம் தேவைதான். அனுராவிட்கு போடும் வாக்குகள் அனைத்தும் சஜித்துக்கு செல்லும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவை இல்லை.
ReplyDelete