Header Ads



அலி சப்ரியை கண்டிக்கிறது பொதுபல சேனா, ஜனாதிபதி தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லையாம்..!

சிங்கள பௌத்த மக்களின் உண்மையான பிரச்சினைகளை அடையாங்கண்டு கொள்ளாததினால் இம்முறை நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமலிருப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது.

எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பு, எந்தவொரு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணகர்த்தாவாக செயற்படவில்லை எனவும் கூறியுள்ளது.

கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் இன்றைய தினம் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பு சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுத்துள்ளது என்று அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இதன்போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “நாங்கள் ராஜபக்சவினரால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லர். 2015ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தோம். எனினும் சிங்கள பௌத்த மக்களுக்காக அந்த முடிவை எடுத்தோம்.

ஆனால் இன்று கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணியான அலிசப்ரி, அண்மையில் ஆற்றிய உரையொன்றில், பொதுபல சேனா அமைப்பு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆலோசனைப்படி செயற்படுவதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அவர் இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றார். பொதுபலசேனா அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற எந்தவொரு கட்சிகளுக்கும் சாதகமாகவோ, அவற்றுக்கு அனுசரணை வழங்கும் விதமாகவோ செயற்படவில்லை.

அத்தோடு நாம் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தவில்லை. எந்தவொரு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணகர்த்தாவாக செயற்படவில்லை உண்மையில் எமது நாட்டிலுள்ள அனைத்து சிங்களவர்களையும் ஒன்றுதிரட்டி, சிங்கள அரசை வலிமைப்படுத்தும் அதேவேளை, ஏனையோரும் வாழத்தகுந்த நாடொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே பொதுபலசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

அதில் ஏதும் பிழையிருக்கவில்லை. ஏனெனில் தற்போது முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டார் அவர்கள் செல்வதற்கு வேறு நாடுகள் இருக்கின்றன.

ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் நாம் பூகோள ரீதியில் சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றோம். எனவே எமக்கென இருக்கின்ற இந்த நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

சிங்கள பௌத்த மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த வேட்பாளர்களும் இம்முறை சரியான தீர்வை முன்வைக்கவில்லை. ஆகவேதான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சுயாதீனமாக இருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அளுத்கம பிரச்சினையின்போது அப்போதைய அரசாங்கம் அந்த வன்முறைகளுக்கு முன்னரே கலவரம் ஏற்படுவதை அறிந்திருந்தது என்பதையும் அங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

தர்கா நகரில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் குவிந்திருந்தனர் என்பதை புலனாய்வுப் பிரிவும் அறிந்திருந்தது.

சம்பவத்தின் பின்னர் நாங்கள் கேட்ட அளுத்கம பிரச்சினை குறித்த விசாரணை ஆணைக்குழுவை கடந்த அரசாங்கமும் நியமிக்கவில்லை, தற்போதைய அரசாங்கமும் நியமிக்கவில்லை.

4 comments:

  1. பொய்யை எவ்வாறு உண்மைப்படுத்த இந்த சைத்தான்கள் முயற்சி செய்கின்றன என்பதை நுணுக்கமாக அவதானித்தால் அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. தர்க்க நகரில் நாடு முழுவதும் இருந்து 1000 க் கணக்கான முஸ்லிம் இலைஞ்ஞர்கல் கூடினார்கல் என்பது மிகப் பெரும் பொய்.

    ReplyDelete
  3. Did you Terror Boss tall you to come out to Media to break the Votes of Sajid. Anyway your terror Boss will not win in this Election..

    ReplyDelete

Powered by Blogger.