Header Ads



அசாத்சாலி, நவவி, மலிக் அசீஸ் ஆகியோரை விசாரிக்க வேண்டும் - ஷானி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல இடமளிக்க வேண்டாம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக புதிய சிங்கள ராவய தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று -24- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஷானி அபேசேகர தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன மக்களுக்கு பொறுப்புக் கூறும் சுயாதீனமான நிறுவனங்களாக மாற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

ஷானி அபேசேகர நாட்டில் இருந்து தப்பிச் செல்ல இடமளிக்க வேண்டாம். அவர் அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை மகிழ்விப்பதற்காக புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைத்தமைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

முன்னாள் அமைச்சர்களின் தேவைக்கு அமையவே ஷானி வேலை செய்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளும் அப்படியே காணப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு வழங்கிய ஆவணங்களை அசாத் நவவி மற்றும் மலிக் அசீஸ் ஆகியோர் மூடி மறைத்தனர்.

இவர்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். இந்த நிறுவனங்களை பொறுப்புக் கூறும் சுயாதீன நிறுவனங்களாக மாற்ற வேண்டும் எனவும் மாகல்கந்தே சுதத்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.