Header Ads



காவிகளின் பலத்தை இம்முறை ஜனாதிபதித், தேர்தலில் நிரூபித்து காட்டியுள்ளோம் -- குணவங்ச தேரர் அறிவிப்பு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பிக்குகளின் பலத்தை நிரூபித்து காட்டியுள்ளதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தொடர்பாக எதிர்காலத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளோம். எனினும் எதிர்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் பின்நிற்க போவதில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் காவி பலத்தை காட்ட முடிந்தது. கடந்த அரசாங்கம் பிக்குகளுக்கு பலம் இல்லை என நினைத்தது.

கடந்த அரசாங்கம் பௌத்த பிக்குகளை கடுமையாக விமர்சித்தது. நாட்டில் பௌத்த பிக்கு படை இருக்கின்றது. நாங்கள் 20 ஆயிரம் பேர் இருக்கின்றோம். நாங்கள் கிராமம், கிராமமாக செல்வோம். அதுதான் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

சிங்களவர்களை முதுகெலும்பு பலமில்லாதவர்களாக நினைத்தனர். 2500 ஆண்டுகள் இந்த நாட்டுக்கு காவி உடையே நிழலை கொடுத்தது. எதிர்காலத்தில் அதனை செய்வோம் என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அப்படியா! ஆனால் விரைவில் பாருங்கள் தேரரே,உதவி வழங்கும் நாடுகள்,ஜரோப்பிய நாடுகள்,மேர்கத்தய நாடுகள்,எரி பொருள் இலவசமாகவும் மானிய அடிப்படையில் வழங்கும் நாடுகள்,சர்வதேச நிதி நிறுவனங்களின் பலத்தை.

    ReplyDelete
  2. தேரர்களே நீங்கள் வீரர்கள் மதத்தைப் படித்த உங்களிடம் இனவாதம் மதவாதம் இருக்கும் வரையில் நாடு முன்னேற்றம் ஏற்படாது.
    பெளத்த போதனைகள் உங்களிடம் இல்லையே.

    ReplyDelete

Powered by Blogger.