ரோயல் பார்க் கொலை = ஜூட் ஜயமஹவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை
ரோயல் பார்க் கொலை ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந் நிலையில் குறித்த மனுவானது இன்றைய தினம் -29- மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கழுத்தை நெறித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 09 ஆம் திகதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment