Header Ads



பிச்சைக்காரர்களை முகாம்களுக்கு அனுப்ப திட்டம்

புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அலங்கரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நகரங்களில் இருக்கும் சகல பிச்சைக்காரர்களையும் முகாம் ஒன்றுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே இதற்கு தேவையான ஆலோசனைகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நடமாடுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது நகரங்களில் அலங்காரத்திற்கு ஏற்படும் சிக்கலான நிலைமை தொடர்பாக கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து சாதனங்களில் பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட காரணம் எனவும் பேசப்படுகிறது.

பிச்சைக்காரர்கள் ரிதியகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மகரகமை பொலிஸார் நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய இப்படியான யாசகரை ரிதியகம முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.