Header Ads



சஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்

வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த விரிசலுக்கு நமது அரசு அணியில் இருக்கும் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகளும் காரணமாக அமைகின்றார்கள்.

இந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வவுனியா, மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் முழுமையாக கையில் எடுத்தமை பிழை. இது தமிழர்களுக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டதை நான் நேரடியாக பார்த்தேன். உண்மையில் இவற்றை தமிழர்களுடன் கூட்டு சேர்ந்து அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும்.

நல்லவேளையில் மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்தை கணேசமூர்த்தியிடம் கொடுக்க நான் கொழும்பில் அழுத்தம் கொடுத்தேன். அதனால் அந்த கூட்ட பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு நான் முக்கிய உரையை ஆற்றினேன். இதனால் தமிழர்களின் பல சந்தேகங்களை தீர்க்க என்னால் முடிந்தது.

ஆனால், மன்னார் கூட்டத்தில் எங்கள் கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தியை அங்குள்ள ஒருசில பிரதேச மட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிரியாக பார்த்ததை நான் கண்கூடாக பார்த்தேன்.

இதன் பின்னணி என்னவென்றால், அங்கே சென்று சஜித் பிரேமதாசவை வெற்றியடைய செய்ய தமிழ் வாக்குகளை நாம் தேடுகிறோம். இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், தமிழ் பிரதேசங்களில் தமது அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக, தமிழ் விருப்பு வாக்குகளை தேடுகிறார்கள். இதுதான் அங்கு இந்த தேர்தல் பிரசாரத்தில் நடந்தது. இதை நான் நன்றாக புரிந்துகொண்டுள்ளேன்.

இந்த நிலைமைகளை இப்போது கோட்டாபய அணியில் உள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகள், முஸ்லிம் எதிர்ப்பை விதைத்து பயன்படுத்த முயல்கிறார்கள். இது இந்த மாவட்டங்களில் சஜித்துக்கு வருகின்ற தமிழ் வாக்குகளை குழப்பிவிடக்கூடாது. இதுவும் என் கவலை.

நீண்ட காலமாக போரினால் பலதையும் இழந்த தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். இன்று இவர்களுக்கு ஏனையவர்களை மேலதிக சலுகைகள், விசேட ஒதுக்கீடுகள் கிடைத்தால் கூட அதில் தப்பில்லை. ஏனென்றால் முப்பது வருட காலத்தில் கிடைக்காமல் போன நிலுவை இருக்கிறதே. இதுபற்றி நான் எனது மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்திலும் பேசினேன்.
இந்த தேர்தல் பிரசாரம் இப்போது முடிந்து விட்டது. இந்நிலையில் இதுபற்றி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இதுபற்றி நான் கவனத்தில் கொண்டு தீர்வை தேடுவேன்.

மனோ கணேசன்

8 comments:

  1. அமைச்சர் மனோ அவர்களே ஒரு மாதத்துக்கு முன்பாக இதை திட்டமிட்டு தமிழ் பிரதேசங்களில் தமிழ் அரசியல் வாதிகளும் முஸ்லிம் பிரததேசங்கலில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் என பிரிந்து பிரச்சாரத்தை தலைமை தாங்கியிருக்கலாம்.ஆனால் இப்போது எல்லாம் இறுதி தறுவாயில் எனவே இனி வட,கிழக்கு தமிழ் மக்களுக்கு அந்த சூழ் நிலயை புரிய வைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பது சிறந்தது.

    ReplyDelete
  2. dei, dei nadikada,enga epudi tagalti vela parpa endu terinjavargalukku teriyum onakku UNP vitta veru nadi illa,western province la wattala, wellawatha, kotahena makkaluku terinjitu nee oru dubakkur endu adanal tan mattiaya maganam KANDY la office toranda, kilakkulua pillayan kuda koottani vakka jaila poi avana partutu vanda ippa summa summa kuvi kondu irukra.. enaku terinja adigamana en TAMIL nanbargal, tamil makkal unna pati solradu ore varta nee oru PACHONDI ENDU

    ReplyDelete

  3. மனோ கனேசனின் கருத்து முற்றிலும் சரியானது. கிழக்கு மாகாணதேர்தல் பிரசாரங்களை முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து மேறகொண்டிருந்தால் பெரும்பாலான சந்தேகங்கள் ஐயங்களைத் தெளிவு படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  4. மனோ சேர் நீங்கள் இப்போது இதை பேசக்கூடாது நீங்களும் அந்த கட்சிக்கு தான் ஆதரவு எனவே இதை நீங்கள் கான வில்லையா அவர்கள் செய்த வேலையை அரசியல் படுத்த வேண்டாம் .உங்கள் மீதுள்ள நல்ல என்னம் குறைந்து கொண்டே செல்கிறது மக்கள் மத்தியில் நீங்கள் பேசிய இனவாத கருத்துக்களால் .

    ReplyDelete
  5. முஸ்லிம்கள் வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகளை நம்பினாலும் இந்த இழிவான தோட்டக்காட்டானுங்களை மட்டும் நம்பக்கூடாது. இவனுடைய குடும்பமே இனவாத விஷத்தை சுமக்கும் கேவலம்கெட்ட பிறப்புகள்

    ReplyDelete
  6. மனோ சொல்லுவது 100% உண்மை
    தமிழர் பகுதிகளில் ஊழல் முஸ்லிம் தலைவர்களின் பிரச்சாரங்கள் தேவையற்றது.
    இதன் மூலம் தமிழர், சிங்களவர் இரு இனங்களின் அதிர்ப்தியையும் சம்பாதித்து வருகின்றார்

    ReplyDelete
  7. ஏன் இது சஜித்துக்கும் .அவருக்குப் பின்னால் உள்ள பெரிய அரசியல் தலைவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டதா ?.ஏன் உங்களுக்கு மட்டும் எப்போதும் குறையாகவே முஸ்லிம்கள் தெரிகிறார்கள் .இது வெற்றிபெறுவதற்கான பிரச்சார பணி இதற்கு யாரைப்பயன்படுத்தினால் சிறந்தது என்று அவர்களுக்கு தெரியாதா...

    ReplyDelete
  8. தம்பி மனோ,உங்களது உளவியல் உங்களை அடிக்கடி காட்டிக் கொடுத்து விடுகிறகிறது.சிங்கள இனவாதிகளோடு இணைந்து பயணித்தாலும் படுபயங்கரமான பிரிவினைவாதிகளான தமிழர்களுடன் பக்கத்தில் கூட நிற்கமுடியாது என்பதையே இது பிரதிபலிப்பதாக உள்ளது. அதனால்தான் கோட்டாபயக்கு வாக்களிப்பது ஏற்றம் என முஸ்லிம்கள் பெரும்பான்மையாக தீர்மானித்துள்ளனர்.ஆனால் இரு முஸ்லிம் தலைவர்களின் பக்தர்களுக்குத்தான் கொஞ்சம் விளங்கல்ல.

    ReplyDelete

Powered by Blogger.