எனது ஆட்சியில் மத ரீதியான, கடும் போக்குகளுக்கு இடமில்லை - சஜித்
பதுளை மாவட்டத்தினை என்னால் மறக்க முடியாது. காரணம் உங்கள் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தான் எனக்கு ஜனாதிபதி வேட்பாளர் பொறுப்பினை பெற்றுக் கொடுத்தது. எனவே உங்களையும் உங்கள் மண்ணையும் நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று -10- மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் பதுளை மாவட்டத்திற்கு நன்றி கடன் செலுத்த வேண்டும்.பதுளை மாவட்ட மக்களுக்கு சமுர்த்தி மற்றும் ஜனசவிய ஆகிய இரண்டும் வழங்கப்படும்.
இந்த மாவட்டத்தில் 7 இலட்சம் முச்சக்கரவண்டி ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு மூன்று இலட்சம் கடன் வழங்கப்படும்.
எனது ஆட்சியில் மத ரீதியான கடும் போக்குகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது பொய். மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதவாதிகளை எதிர்ப்பேன் என்கிறார்
ReplyDelete