துமிந்தவுக்கும் மன்னிப்பு வழங்க, ஜனாதிபதி மைத்திரி தயார் - ஹிருணிக்கா
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்ய தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் றோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பான குற்றவாளிக்கு ஜனாதிபதி சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமை சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்டோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உட்பட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருந்தது.
Post a Comment