யாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு அடாவடி - எட்டியாந்தோட்டையில் வீடு புகுந்து தாக்குதல்
கேகாலை, எட்டியந்தோட்டை தமிழ் பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டதிற்குள் இன்று -18- இரவு நுழைந்த கும்பல், அங்குள்ள தமிழ் மக்களின் சில வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள சில பெண் பிள்ளைகளிடம் அநாகரிகமாக அந்த கும்பல் நடக்க முயற்சி செய்ததாக கனேபல்ல பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
யாருக்கு இம்முறை வாக்கு அளித்தீர்கள் என்று கேட்டு மிகவும் அநாகரிகமாக குறித்த கும்பல் செயற்பட்டதாக தெரிவிக்கின்றன.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த கனேபல்ல மக்கள், எட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் கூறினார்.
இந்து கிறிஸ்தவ தீவிரவாதிகள் மற்றும் இனவாதிகள் அழியட்டும்
ReplyDelete