ஆனமடுவயில் ஹோட்டல், மீது குண்டுத்தாக்குதல்
புத்தளத்தில் ஹோட்டல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நேற்று பெற்ரோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் குறித்த ஹோட்டல் மீது 7 முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹோட்டல் மீது துப்பாக்கி சூடு மற்றும் கும்பல் தாக்குதல்கள் இடம்பெற்றதுடன், இரண்டு முறை தீ வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ஆதாரங்கள் இல்லாத வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹோட்டலை சுற்றி பெற்ரோல் ஊற்றப்பட்டு பின்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மற்றும் இதற்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் சிசிடீவியில் பதிவாகியுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment