சிறந்த சேவையாற்றிவிட்டே நான், மக்களாணையினை கோருகின்றேன் - கோத்தாபய
தேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் கொள்கை பிரகடனத்தினை உருவாக்கியுள்ளேன்.
ஐந்து வருடகாலம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளி மீண்டும் ஆட்சியதிகாரத்தை கோரவில்லை, சிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மினுவாங்கொட நகரில் இன்று இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பிற்கு பாரிய சேவையாற்றிய இராணுவத்தினர் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டமையினால் மக்களின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் எவ்வித அடிப்படை தகைமைளும் அற்ற அமைச்சரவையினால் தேசிய பாதுகாப்பினை ஒருபோதும் பலப்படுத்த முடியாது.
அரசாங்கத்தின் பலவீனத்தினை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்தி தங்களின் நோக்கத்தினை நிறைவேற்றிக் கொண்டார்கள். எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் மீண்டும் பலப்படுத்தப்படுவார்கள்
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவில்லை. இதற்கு பிரதான காரணம் அரசியல் பகைமையே இதனால் தேசிய பொருளாதாரமும் மறுபுறம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பாரம்பரிய விவசாய உற்பத்திகளுக்கு கடந்த நான்கரை வருட காலமாக உரிய நிலை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சிறுஏற்றுமதி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும். விவசாய துறை அடைந்துள்ள வீழ்ச்சி நிலையில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
மீள் ஏற்றுமதி மாபியாக்களினால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேசிலை மீள் ஏற்றுமதி செய்வதனால் இலங்கையின் பாரம்பரிய தேயிலை உற்பத்தி உலக சந்தையில் பெற்றிருந்த பெறுமதி தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
இழக்கப்பட்டுள்ள பெயர்தரம் மீண்டும் சர்வதேச சந்தையில் பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
You haven't done anything apart from crime and stealing, your and your family earned for many generation, why are you coming again?
ReplyDelete