பள்ளிவாசல்களை எல்லாம், உரிமை கோரும் நிலை வரலாம், தீர்ப்பில் திருப்தி இல்லை - ஓவைசி
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருப்தி இல்லை என ஐதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
All India Majlis-e-Ittehadul Muslimeen கட்சியின் தலைவரும், ஜதராபாத் பாராளுமன்ற தொகுயின் உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது, தீர்ப்பில் திருப்தி இல்லை.
நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் வார்த்தைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உச்ச நீதிமன்றம் உண்மையில் உச்சமானது தான், ஆனால் தவறிழைக்காதது அல்ல.
எங்களுக்கு அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது, நாங்கள் எங்கள் உரிமைக்காகவும். நீதிக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் நன்கொடையாக தேவையில்லை. இந்த 5 ஏக்கர் நில சலுகையை நாம் நிராகரிக்க வேண்டும், எங்களுக்கு வேண்டாம்.
மசூதி பிரச்னையில் சமரசம் செய்ய முடியாது.நாட்டில் உள்ள பல மசூதிகளுக்கு சங்கிஸ் உரிமை கோரி வருகின்றனர். அந்த வழக்குகளிலும் இந்த தீர்ப்பை அவர்கள் மேற்கோள் காட்டுவார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Post a Comment