Header Ads



கோத்தபாய அமெரிக்க பிரஜையா என்பது சந்தேகத்திற்குரியது

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க பிரஜை உரிமையை கைவிட்டாரா அல்லது அவர் தற்போது அமெரிக்க பிரஜையா என்பது சந்தேகத்திற்குரியது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை, திக்குவளையில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணி அலி சப்றி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கோத்தபாயவின் அமெரிக்க கடவுச்சீட்டு மற்றும் குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான சான்றிதழ் என காட்டிய ஆவணங்களில் பிழைகள் இருக்கின்றன. அந்த ஆவணங்களை செய்தியாளர்களுக்கு வழங்காததன் மூலம் இந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது.

மக்களை ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்களை காட்டியமைக்காக சட்டத்தரணி அலி சப்றியின் சட்டத் தொழிலுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும்.

அலி சப்றி காட்டிய கடவுச்சீட்டில் என்ன முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதில் CANCEL என்ற வார்த்தை காணப்பட்டது. CANCEL என்றால் இரத்துச் செய்யுங்கள் என்று பொருள். அமெரிக்கா மாத்திரமல்ல உலகில் எந்த நாடாக இருந்தாலும் கடவுச்சீட்டை இரத்துச் செய்யும் போது CANCELLED என்ற முத்திரை கடவுச்சீட்டில் குத்தப்படும். கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டு விட்டது என்பது இதன் அர்த்தம்.

எனினும் இந்த போலி ஆவணத்தை தயாரித்த நாமல் ராஜபக்ச போன்றோருக்கு இதனையும் சரியாக செய்ய தெரியவில்லை. CANCELLED என்ற சரியான வார்த்தைக்கு பதிலாக CANCEL என்ற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் இது பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது.

அது மாத்திரமல்ல அமெரிக்காவில் சான்றிதழ்களில் திகதியை எழுதும் போது, முதலில் மாதம் அடுத்ததாக தினம் இறுதியில் ஆண்டு எழுதப்படும். எனினும் இந்த சான்றிதழில் இலங்கையின் முறைப்படி முதலில் தினம், அடுத்ததாக மாதம் இறுதியாக ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.