Header Ads



"இன்றைய இறுதி அமைச்சரவையில், பேசப்பட்ட சில முக்கிய விடயங்கள்"

ஐந்து வருட காலப்பகுதியில் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று 11-11-2019 இடம்பெற்ற இறுதி அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள், ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஜனநாயகவாத ஆட்சியை மேற்கொள்ள செயற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஊடகம், தகவல் அறியும் சட்டமூலம் உட்பட பல துறைகளில் சுதந்திரத்தை உறுதி செய்து உலகில் சுதந்திரமான நாடு ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி செயற்பட்டார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 1800 நாட்களில் சுமார் 3000 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் ஒரு நபரேனும் கொலை செய்யப்படவில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தான் பதவிக்கு வந்ததும், பதவியை விட்டு செல்வதும் மிகவும் இலகுவாக இடம்பெறுவதாக இறுதிக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Shameful Liar Sena did not leave the president seat after 100 days as he promised.

    ReplyDelete
  2. Shameful Liar Sena did not leave the president seat after 100 days as he promised.
    Shameful present in the history of SriLanka.. Very Shame.

    ReplyDelete
  3. முஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.