"வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் சிறிசேன"
2015ம் ஆண்டு ,மிகப் பெரும் அதிகாரப் பலத்தினை எதிர்த்து நின்ற சமர்க்களத்தின் வழியாக 62 இலட்சத்து 17 ஆயிரத்து 112 வாக்குகளை அளித்து சனாதிபதியாக இந்த அரசியல் கோமாளி , ஏமாற்றுக்காரனான சிறிசேனாவை மக்கள் தெரிவு செய்தனர்.
ஆனால் இந்த ஏமாற்றுக்காரன், தனக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் மீது மண்ணள்ளிப் போட்டதுடன், தன்னை அதிகாரத்திற்கு கொண்டுவர முக முக்கிய பங்காற்றிய தமிழ், முஸ்லிம்,மலையக மக்களுக்கு நன்மை தரத்தக்க ஒரு சிறு துரும்பைத்தானும் செய்யவில்லை.
சிறிசேனா தனது பதவிக்காலத்தில் செய்த கைமாறுகள்......
* கோதபாய கும்பலால் கடத்தி கொல்லப்பட்ட , சுதந்திர ஊடகவியலாளரும் கலைஞரும் முன்னாள் ஜே.வி.பி தோழருமான பிரகீத் எக்னாகொடல்லவின் மனைவி சந்தியா, தனது துணைவர் பிரகீத் கோதபாயவால் காணாமலாக்கப்பட்டதற்கு நீதி கோரி நீதிமன்றில் நின்ற போது, அவரை அச்சுறுத்தியதுடன் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கோதாவின் ஏவலாளனான ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டணைக்கு பொது மன்னிப்பு வழங்கியமை.
*மக்களின் பலத்துடன், அரசியல் தலைமைகளின் பங்களிப்புடன் தோற்கடிக்கப்பட்ட மகிந்த +கோதா + பசில் கும்பலை பாதுகாத்து, பின்கதவு வழியாக, ஜனநாயக முறைமையை கேலிக் கூத்தாக்கி மகிந்தவை பிரதமராக நியமித்தமை.
*ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் அழிவின் போது வெளிநாட்டில் இருந்து கொண்டு,தனக்கு உடனடியாக நாடு திரும்ப விமானம் கிடைக்கவில்லையென பகிரங்கமாக பொய் சொன்னதுடன், ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு மறைமுகமாக உதவியமை.
*சொந்தக்கட்சியான சுதந்திரக்கட்சியை, மகிந்த கும்பலுக்கு தாரைவார்த்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி கோதாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தமை.
*இளம் பெண் ஒருவரை மோசமாகத் தாக்கி கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியமை.
இத்தகைய அரும்பெரும் பணியாற்றிய சிறிசேனா இன்னும் ஒரிரு தினங்களில் வீட்டுக்கு போகப் போகிறார்,ஆனால் இந்த அரசியல் போக்கிரிக்கி, வரலாற்றில் உள்ள இடம் குப்பைக் கூடையே
Fauzer Mahroof
ponnayek
ReplyDeletehe is joker, he does not have quality or capability to be a leader. he finally destroyed SLFP also. now no more SLFP with the support of public, now SLFP be came as a letterhead party.
ReplyDeleteithu mattuma....?
ReplyDeleteAyyo bro all of the rejected personals by the people in GE, became MPs, became Provinces rullers, each and every state events became his own life story books...and more more...
I believe he may disorder of mind, should send him good hospital...
GOD BLESS OUR MOTHERLAND..!!!
Oh sorry there is one more important thing he did that allowed Indian RSS gang opened their offices in our motherland......
ReplyDeleteநல்ல காலம். ஜெயவர்த்தனாவுக்கு நாங்கள் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லனும் பாருங்கோ. ஜனாதிபதியின் பதவிக் காலம் நல்லவேளை பதினைந்து வருடங்கள் என்று அவரது அரசியல் அமைப்பில் குறிப்பிடாமல் நாட்டைக் காத்தது.
ReplyDeleteSorry Sena, Panna Sena, Liar Sena, 21,4 Terror Sena, Many other shameful names shoots him..
ReplyDeleteSorry Sena, Panna Sena, Liar Sena, 21,4 Terror Sena, Many other shameful names suits him/ Maithrypala Sirisena
ReplyDeletePissek
ReplyDeleteசிம்பன்சி
ReplyDelete