Header Ads



வசீம் தாஜூடீனுக்கு ஏற்பட்ட, நிலைமை எனக்கும் ஏற்படலாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

வென்னப்புவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பொதுக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றாக அழித்து பொதுஜன பெரமுன முன்நோக்கி வந்துள்ளது என்பதால், நான் கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வந்துள்ளேன்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கும் போதே தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்துள்ளார் என்பது தாமரை தடாகம், தாமரை கோபுரம் என்பன மூலம் தற்போது தெளிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரியான தீர்மானத்தை எடுக்காது போனால், எனக்கும் தாஜூடீனுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.