பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஆற்றல், ஜனாதிபதி கோட்டாபயவுக்கு உள்ளது
சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதிக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளது என பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் பெல்லன்வில ரஜமகா விகாரைக்குச் சென்று விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இதன்போது விசேட அனுசாசன உரையொன்றை நிகழ்த்தும்போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,
நாட்டை சரியான திசைக்கு கொண்டுவரும் முதல் எட்டில் மக்கள் வெற்றிபெற்றுள்ளனர். சவால்களுக்கு பயப்படாத ஜனாதிபதிக்கு நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அதற்காக பொறுமையுடன் ஜனாதிபதிக்கு காலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
நாட்டில் மாற்றம் ஒன்றுக்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டினை பலப்படுத்துவதற்கு மகாசங்கத்தினரது முழுமையான ஒத்துழைப்பும் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
புலமை வாய்ந்தவர்களையும் துறை சார்ந்தவர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கும் மகாசங்கத்தினரது முழுமையான ஒத்துழைப்பு உள்ளது என்றா
Post a Comment