எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, சஜித் தகுதியானவர் இல்லை - ராஜித
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாஸ தகுதியானவர் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்தக்கருத்தை இன்று வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, கட்சிக்குள் இருந்த முரண்பாடுகளே காரணம். ரணில் விக்ரமசிங்கவின் மீது இதற்கான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் எனும்போது அது சர்வதேசத்துடன் இணைந்த பதவியாகும். இது வெறுமனே ஒருவரின் புகழ் இதற்கு உதவாது.
சஜித் பிரேமதாஸ குறைந்த அரசியல் அனுபவத்தையே கொண்டிருக்கிறார். இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகினால் தலைமைப்பதவிக்கு வேறு எவரும் பொருத்தமானவர்கள் இல்லை.
இதற்கிடையில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை பரிந்துரை செய்ததும் அவசரமான முடிவு என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.
சய்ட்டம் கொள்ளைக்காரன்!
ReplyDeleteஎதிர்க்கட்சி தலைமைக்கு தகுதி இல்லையென்றால் எவ்வாறு நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினீர்கள் ?
ReplyDelete