கோத்தாபய ஜனாதிபதியானதை ஏற்கிறேன், எதிர்க்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் - குமாரவெல்கம
(எம்.மனோசித்ரா)
நாட்டு மக்கள் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளமையை மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொள்கின்ற போதிலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நான் அவர் மீது வெளியிட்ட அதிருப்தி நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. என்னுடைய அந்த முடிவில் நான் உறுதியாக இருக்கின்றேன். இதற்கான காரணங்கள் ஏற்கனவே பல முறை என்னால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை நன்கு அவதானித்து எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.
அரசியலமைப்பின் படி அடுத்த வருடம் மார்ச் மாதம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அது குறித்து எமது நிலைப்பாடு என்று எதுவும் இல்லை. எனினும் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும்.
2020 மார்ச் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் பெரும்பான்மை கோரப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்தே தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறினார்.
Post a Comment