பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரியே நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார்
பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார் என ஐக்கிய மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர்,
கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து அமைக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும் தவறானவை. கடந்த அரசாங்கம் வெறுப்பை தூண்டியது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் FCID போன்ற நிறுவனங்கள் அரசாங்கத்துடன் நேரடி தொடர்பை கொண்டிருந்தன. பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகள் அறியாமல் இருப்பது எவ்வாறு ? அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களை பிரச்சினைக்குள் சிக்கவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை உறுதியாகிறது.
அதனால் சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சுயாதீனமானதும், நியாயமான பொலிஸ் துறை ஒன்று அவசியம்.
கடந்த காலத்தில் FCID க்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி பல முக்கியமான கருத்துக்களை வெளியிட்டார். அதனால் அவ்வாறான அனைத்து நிறுவனங்களும் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து செயற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நல்லாட்சி என்ற பதத்தை உபயோகித்து அதற்கு எதிரான ஆட்சியை கடந்த அரசாங்கம் நடத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியால் நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டதால் மக்கள் ஏகோபித்த தீர்மானத்தை எடுத்து கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினர் என்றார்.
Post a Comment