புத்திசாலித்தனமாக வாக்குகளைப் பயன்படுத்துங்கள் - முஸ்லிம் கவுன்ஸில்
பல தசாப்தங்களாக இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டு வந்த ஜனநாயக விழுமியங்களை புதிய ஜனாதிபதி நிலைநிறுத்துவார் என்பதே எமது நேர்மையான எதிர்பார்ப்பு என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு அதன் தலைவர் என்.எம். அமீன் மற்றும் செயலாளர் எஸ்.ஏ. அஸ்கர்கான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா, 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்புடனும் அமைதியான ஒரு தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பல தசாப்தங்களாக இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டு வந்த ஜனநாயக விழுமியங்களை புதிய ஜனாதிபதி நிலைநிறுத்துவார் என்பது எங்கள் உண்மையான விருப்பமாக காணப்படுகின்றது. அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும், புதிய அரசு முஸ்லிம் சட்டத்தின் ஆதிபத்தியத்தை எற்றுக் கொண்டுள்ளதனாலும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இலங்கை பல வளங்கள் கிடைக்கப்பெற்ற ஒரு நாடாகும். இருப்பினும், அரசியல் நன்மைகளை மதிப்பிடும் ஒரு கலாசாரத்தின் காரணமாக நமது உண்மையான இலக்கினை அடைவதில் தடைகளை எதிர்கொள்கிறோம். இது தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்து வருகின்றது. இலங்கையர்களான நாங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து புதிய ஜனாதிபதி அனைத்து தடைகளையும் தாண்டி இடைவெளியினை நிரப்புவதற்காக புதிய மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சோகமான நிகழ்வுகளானது, தீர்க்கப்பட முடியாத சூழ்ச்சிகள், குரோதங்கள் மற்றும் வரலாற்று வன்முறைகள் என்பவற்றினை இதன் பின்விளைவாக உருவாக்கியது ஒவ்வொரு இலங்கை குடி மகனினதும் நீதி, பாதுகாப்பு, மற்றும் கண்ணியம் ஆகியவற்றை நிலைநிறுத்தும் திறன் கொண்ட ஒரு தலைவரே இலங்கைக்கு தேவையாக இருக்கிறது. அவர் குடிமக்கள் அனைவரினதும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடிய ஒருவராகவும் மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதைக்குரிய சூழ்நிலையை உருவாக்கி, ஒன்றாக இணைந்து எல்லோரினதும் கூட்டு நோக்கத்தினை அடைவதற்காக செயற்படக்கூடியவராகவும் புதிய ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
அனைத்து மக்களிடையேயும் இலங்கையருக்கான ஓர் அடையாளத்தையும் சமத்துவத்திக்கான ஓர் அர்த்தத்தினையும் கொடுக்க விரும்புகிறோம். அதேநேரத்தில் மாறுபட்ட கலாசாரங்களின் பன்முகத்தன்மையையும் நன்மையையும் அங்கீகரிக்கிறோம். பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவமானது உண்மையிலே எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தனிப்பட்ட பலமாக இலங்கையின் அபிவிருத்திக்கு துணை நிற்க வேண்டும். இந்த இரட்டை சூத்திரங்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்துக்கொள்ளாத ஒரு நேர்மறையான பங்களிப்பாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆரம்பத்திலிருந்தே அனைத்து சமூகங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஊக்குவிக்க பெருமுயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதேபோன்று ஒத்த நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றின் ஒத்துழைப்போடு எங்கள் நாட்டை அமைதியான, இணக்கமான மற்றும் வளமான ஓர் இடமாக மாற்ற இந்தப் பணியினை நாம் தொடர்வதனை உறுதிசெய்கிறோம்.
ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து இலங்கையர்களும் புத்திசாலித்தனமாக, சுதந்திரமாக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அமைதியான, நல்லிணக்கமான மற்றும் செழிப்பான ஓர் எதிர்காலத்தினை எதிர்பார்த்து அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி! நல்ல அறிக்கை. ஆனால் முஸ்லிம்கள் கோட்டாவுக்குதான் வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்களின் தலையில் சாணம் அரைக்கும் தலைவர்கள் சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பர்.
ReplyDeleteமுஸ்லிம்களே சிந்தியுங்கள்.கோட்டாவின் பக்கம் இருக்கும் இனவாதிகளை மகிந்த உற்றுநோக்கினாலே அடங்கிவிடுவர்.ஆனால் சஜித்திற்கு வேலைசெய்யும் சம்பிக்க ரனிலையே ஓரம்கட்டியவன்.எனவே சஜித்தும் சம்பிக்கவுக்கு அடங்கித்தான் போகவேணும். எனவே முஸ்லிம்களே கோட்டாவுக்கு வாக்களித்து இனவாதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்போம்.
MUSLIMS SHOULD VOTE WISELY, Insha Allah. THE MUSLIM VOTE BANK SHOULD NOT BE MISGUIDED BY THE "DECEPTIVE/MUNAAFIQUE" MUSLIM COUNCIL OF SRI LANKA AND THE MUSLIM POLITICIANS. READ THE LINK BELOW, Insha Allah.
ReplyDelete1. http://www.jaffnamuslim.com/2016/12/blog-post_269.html
2. http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_671.html
கண்ணீர் மல்கினார் அமீன், வேதனைப்பட்டார் மனோ கணேசன்
Sunday, August 07, 2016 www.jaffnamuslim.com
'மஹிந்த தள்ளிவைத்த பொதுபல சேனா, தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாகியுள்ளது'
Thursday, December 22, 2016 www.jaffnamuslim.com
பொதுபல சேனாவுக்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஆசிர்வாதம் வழங்கியிருந்தது. தற்போதைய அரசாங்கம் பொதுபல சேனாவுடன் நெருக்கமாகியுள்ளது என முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அமீன் மேலும் குறிப்பிட்டதாவது,
தற்போதைய அரசாங்கம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களிடத்தில் குறிப்பிடும்படியான நம்பிக்கை இல்லை. தமது முறைப்பாடுகள் கிடப்பில் போடப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதான் யதார்த்த நிலவரமும் ஆகும்.
மஹிந்தவின் காலத்தில், மஹிந்தவினால் பொதுபல சேனா தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆசிர்வாதம் இருந்தது.
தற்போதை அரசாங்கத்தில் நிலைமை அவ்வாறு அல்ல.
நீதியமைச்சர் விஜயதாஸா பொதுபல சேனாவை பகிரங்கமாகவே அரவணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இது அபாயகரமானது மாத்திரமல்லாமல் நாட்டிற்கும், கடினப் போக்குடைய பௌத்தசிங்கள தரப்பிற்கும் தவறான வழிகாட்டலையும் வழங்கும்.
முஸ்லிம்கள் விவகாரத்தில் இந்த அரசாங்கமும், நீதியமைச்சரும் எத்தகைய நிலைப்பாட்டில் பயணிக்கின்றனர் என்பதை இதன்மூலம் முஸ்லிம் சமூகத்தினால் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதெனவும் அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.
Posted in: செய்திகள்
The Muslims should stand together and vote Gotabaya Rajapaksa to victory on November 16th., 2019, the Muslim vote bank will be happy that we were part of Gotabaya's victory as partners with the majority Sinhalese people and those that love our "MAATHRUBOOMIYA" Mother Sri Lanka and move towards Reconciliation, Peace and Harmony, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP/SLPP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.