Header Ads



ஒரு முஸ்லிமின் இயக்கமாக ஈமான், அமையவில்லை என்றால் அவன் தவறில் முழ்கிவிடுவான்


நேற்று -29- துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நிகழ்வொன்றில் துருக்கி அதிபர் நிகழ்த்திய உரை உறங்கி கிடக்கும் முஸ்லிம் உலகின் சிந்தனையை தட்டு எழுப்பியுள்ளது

அந்த உரை சுருக்கம் உங்கள் பார்வைக்கு,,

காலங்கள் மாறினாலும் இஸ்லாத்தின் அடிப்படைகள் மாறுவதில்லை. நாம் எந்த காலத்தில் வாழ்ந்தாலும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இறைவனையும், நபியையும் மனதளவில் நம்பி சாட்சியம் சொல்வது தொழுகை நோன்பு ஹஜ் ஸகாத் நம்மீது கடமையாகும்.

நாம் எந்த காலத்தில் வாழ்ந்தாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், வட்டி பொய் துரோகம் அனியாயம் அபாண்டம் திருட்டு தற்பெருமை கெட்ட எண்ணம் அப்பாவிகளை கொலை செய்வது நம்மீது ஹரதமாகும்.

எந்த காரணத்திற்க்காகவும் குர்ஆனின் ஆணைகளை அலச்சியம் செய்யாமல் இருப்பதும், அதை மறுக்காமல் இருப்பதும், அதை மனதிருப்தியோடு ஏற்று கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையைாகும்.

இஸ்லாத்தில் நீங்கள் புதியதொன்றை இணைக்கவும் முடியாது, இருக்கும் ஒன்றை நீக்கவும் முடியாது.

இஸ்லாத்தின் இந்த அம்சம் எனக்கு பிடிக்கவில்லை, இந்த விசயம் இந்த காலத்திற்கு ஏற்றதல்ல இந்த விசயம் அறிவு சார்நதது அல்ல என்று கூறுவதும் தனது வாழ்வியலுக்கு ஏர்ப்ப இஸ்லாத்தை வழைப்பதும் அடாத செயலாகும் அத்துமீறிய நடைமுறையாகும்

நமது இச்சைகளுக்கு ஏற்ப, நமது வாழ்வை அமைத்து கொள்ளாமல், இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப்ப நமது வாழ்வியலை அமைத்து கொள்ள வேண்டும்.

#காலத்தின்போக்குகள் #நம்மைஇயக்காமல் #இஸ்லாமியசட்டங்கள் #நம்மைஇயக்கவேண்டும்
ஈமான் ஒரு முஸ்லிமின் இயக்கமாக அமையவில்லை என்றால் அவன் தவறில் முழ்கிவிடுவான்
சுருங்க கூறுவது என்றால் நமது போக்கிற்கு ஏற்ப இஸ்லாத்தை வழைக்காமல் இஸ்லாத்தின போக்கிற்க்கு ஏற்ப்ப நாம் வழைந்து வாழ பழகி கொள்வோம்
இவ்வாறு அவரின் உரை அமைந்திருந்தது

1 comment:

  1. Also Belief And Speech Should be In Action......

    May Allah Protect All Muslim Rulers And guide them and people in the path of SalafusSaliheens's way

    ReplyDelete

Powered by Blogger.