இன்று புதன்கிழமை நள்ளிரவுடன், தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (13) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இவ்வாறு தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த பின்னர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வேட்பாளர் ஒருவரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று (13) நள்ளிரவுடன் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரச்சாரங்களை தடுப்பதற்கு சட்டரீதியான இயலுமை இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்டுகின்றமை ஆதரங்களுடன் நிரூபிக்கப்படுமாயின் அதற்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுக்க முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Post a Comment