நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் - சந்திரிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கட்சியில் இருக்கும் வயதானவர்களை நீக்கி விட்டு, இளைஞர், யுவதிகளை கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு வென்னப்புவ பிரதேசத்தில் நடத்திய பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் எமது கனவை கலைத்தனர். எம்மை திட்டி விமர்சித்தவர்கள், சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், மண்டியிட்டவாறு அவரிடம் வந்து, நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.
எங்களை இணைத்து கொண்டு எமக்கு அமைச்சு பதவியை தாருங்கள் என்று கூறினர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கு வயதானவர்களை அனைவரையும் விரட்டு விட்,டு, நாங்களும் வயதானவர்கள் தான், வயதானவர்களில் நல்லவர்களை வைத்து கொண்டு, ஏனையோரை விரட்டி விட்டு, இளைஞர், யுவதிகளை கட்சியில் இணைந்து கொள்வோம் என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
Go ahead,
ReplyDeletemadam
Go ahead,
ReplyDeletemadam