Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட மகனுக்காக, இழப்பீடு கோரும் அமெரிக்க பெற்றோர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட தமது 11 வயதான மகனுக்காக இழப்பீடு வழங்குமாறு கோரி அமெரிக்க பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் இன்று -22- அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அலெக்ஸாண்டர் ஹெரோவ் மற்றும் அவரது மனைவி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதிகாரிகளின் கவனமின்மை காரணமாக நடந்த இந்த குண்டு தாக்குதலில் தமது மகன் கொல்லப்பட்டதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த தமது மகன் கொல்லப்பட்டதாகவும் மனுதார்கள் கூறியுள்ளனர்.

மனுதார்கள் தமது மனுவில் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பதில் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

2 comments:

  1. மேல் உள்ள பிரதிவாதிகளுடன் உண்மையான பிரதிவாதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த கொலையாளிகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.