முஸ்லிம்களுக்கு அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் - அமீர் அலி
சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வேண்டாம் என்று கூறியவர்கள். எதிர்காலத்தில் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் இருக்க கூடாது என்பார்கள். அனைவரும் இந்த விடயத்தில் சிந்திக்க வேண்டும் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் கல்குடாத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக்; கூட்டம் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
கடந்த காலத்தில் கிறிஸ் மனிதன் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் கோட்டாபய ராஜபக்ஸ எவ்வளவு துன்பப்படுத்தினார்கள் என்பதை தன்மானமுள்ள எந்தவொரு சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகம் மறந்து விட முடியாது.
இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினை அடிமைப்படுத்தி பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்ஸவின் குடும்ப உறவுகள் எவ்வாறு உள்ளது என்றால் தமிழர்களுக்கு அடித்து விட்டோம், முஸ்லிம்களுக்கு அடிக்க வேண்டும். எதிர்காலத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கும் அடித்து பணிய வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
கருணா அம்மான், பிள்ளையான், வியாளேந்திரன் போன்றவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள். வியாளேந்திரன் பல இடங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை குடித்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதாக என்று கேட்டார். தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு எந்தவொரு தன்மானமுள்ள தமிழனும் வாக்களிக்க மாட்;டார்கள் என்று கூறிய வியாளேந்திரனை போன்றவர்கள் இப்போது அவர்களுக்கு வாக்கு தேடித் திரிகின்றார்கள் என்றால் தன்மானமிக்க தமிழ் மக்களே தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். இவர்களுக்கு தன்மானம் இல்லாமல் இருக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தன்மான்தோடு வாழ்கின்றவர்கள் என்ற செய்தியை சொல்லக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். ராஜபக்ஷ காலத்தில் தான் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட விடயத்தை பற்றி பாராளுமன்றத்தில் வியாளேந்திரன் எம்.பி பேசினார்;. இவ்வாறெல்லாம் பேசிவிட்டு ராஜபக்ஷ குடும்பத்துக்கு வாக்கு கேட்கின்றார்கள்.
கடந்த காலத்தில் பிள்ளையான் இவர்களின் அடிவருடிகளாக, கொலைவெறியை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மிச்சமாகவுள்ள தமிழ் மக்களுடையதை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக எடுத்த நாடகத்திற்கு தமிழ் சமூகம் தெளிவாக இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் வடகிழக்கு மற்றும் வடகிழக்கிற்கு அப்பால் வாழும் எமது உறவுகளை காப்பாற்றுகின்ற போராட்டத்தில் நீங்கள் உங்கள் வாக்குகளை அன்னச் சின்னத்திற்கு வழங்க வேண்டும். இதன் மூலம் எமது பிரதேசத்தினை, இடத்தினை, கிராமத்தினை, பிரதேச செயலாளர் பிரிவுகளை காப்பாற்ற முடியும்.
சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வேண்டாம் என்று கூறியவர்கள். எதிர்காலத்தில் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் இருக்க கூடாது என்பார்கள். அவ்வாறானால் நாம் கடலிலா கொண்டு விழுவது. எனவே அனைவரும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளுங்கள் என்றார்.
Post a Comment