சஜித் தோல்வியடைந்த அதிர்ச்சியில், மாரடைப்பினால் அக்பர் பாதுசா மரணம்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த அதிர்ச்சியில் நபர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை, பாராவத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான அக்பர் பாதுசா என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஜனாதிபத தேர்தல் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சஜித் பிரேமதாஸ அறிவித்தார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்தவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நுவண் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இச்செய்தி தொடர்பான மேலதிக தகவல்கள் இன்றைய பத்திரிகை ஊடகங்களிலும்
வெளியாகி உள்ளன.
MN
Post a Comment