சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சேறுபூசும், காணொளியை வெளியிடத் தயாராகும் இராஜ் வீரரத்ன
பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன, புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சேறுபூசும் காணொளி ஒன்றை வெளியிட தயாராகி வருவதாக தெரியவருகிறது.
எதிர்வரும் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன, “புதல்வரே” நவம்பர் 13ம் திகதி வடக்கு திசை நோக்கி உங்களது ஸ்மார்ட் போனை சுப நேரத்தில் பார்ப்பீராக? எனக் கூறியுள்ளார்.
இராஜ் வீரரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டமானவனுக்கு எப்பவும் மட்டமான புத்திதான் .-மர்சூக் மன்சூர் - தோப்பூர்
ReplyDeleteOnnum pudunga mudiyaathuda inatthuvesigale!!
ReplyDeleteகோட்டாவுக்கு சேறு பூசும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் இதில் வரவே இல்லை. இராஜ் நல்லவன் இல்லை. ஆனால் யூ.என்.பீ. படுமோசம். எமது சமூகம் ஏமாற்றப்பட்டுவிட்டது. எல்லாவற்றையும் செய்தவர்கள் யூ.என்.பி தான். திகன கலவர நேரம் அவர் சுகமில்லையாம். எத்தனை நாள் சுகமில்லாமல் இருந்தார்?
ReplyDelete