குடியுரிமை தொடர்பில் பேசி ஜனாதிபதி, தேர்தல் களத்திலிருந்து யாரும் வேளியேற தேவையில்லை - சஜித்
நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் டிஜிடல் புரட்சியினுள் குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு 30 தொழிற்பேட்டைகள், 30 புதிய தொழிநுட்ப பாடசாலைகள் மற்றும் 30 தகவல் தொழிநுட்ப பூங்காக்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நான் அசல் இலங்கையன். குடியுரிமை எனக்கு தேவையற்றது.
16 ஆம் திகதி சாதனை வெற்றியை நாம் நாடு பூராகவும் பெறுவோம்.
அதன் காரணமாக குடியுரிமை தொடர்பில் பேசி யாரும் இந்த பந்தயத்தில் இருந்து வௌியேற தேவையில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Post a Comment