Header Ads



"முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, எந்த பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை"

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அல்லாத முழு அமைச்சர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 38 ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அமைச்சரவை அல்லாத ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 40ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

16 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், 35 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 3 பிரதியமைச்சர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் முஸ்லிம்கள் எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 38 பேர் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. எங்கடா பிச்சைக்கார வியாழேந்திரன்? நாளை பாராளுமன்ற தேர்தல் முடிந்தகையோடு அவன் அரசியலும் முடிந்துவிடும்.

    ReplyDelete
  2. Dear Brother and sisters, Increase your ties with the TRUE ONE GOD, Allah, who is the CREATOR of All Human and universe and who has the control of all our affairs.

    LET us get KEEP OUR TRUST in him alone. He will not leave his slave in lost, who will obey him fully.

    Without his will nothing will move in all universe.

    ReplyDelete

  3. http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_425.html

    ReplyDelete
  4. இதன்பிறகாவது முஸ்லீம் சமூகம் ஒன்றிணையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் -எதிர்வரும் பாராளுமண்ற தேர்தல் தான் அடுத்து வரப்போகும் 5 வருட கால முஸ்லிம்களின் நிலைப்பாட்டினை நிர்ணயிக்க போகிறது. சிறுபான்மையினர் ஒன்றிணைந்து தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றனர் - ஆட்சியமைக்க பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டுமென்றால் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.
    மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete
  5. கடந்த காலங்களில் முஸ்லீம் அமைச்சர்கள் தங்கள் பதவிகள் மூலம் முஸ்லீம் சமூகத்திட்கு குறிப்பிடத்தக்க எந்த அபிவிருத்திகளும் செய்யவில்லை .உதாரணமாக கொழும்பு முஸ்லிம்களின் கல்வி நிலைமை மிகவும் கவலை அளிக்கின்றது .இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே வாக்களித்து வந்தவர்கள் . எனவே இவர்களுக்கு தற்போது பாராளுமன்ற பதவிகளும் தேவையா ?என்ற நிலைதான் காணப்படுகின்றது .

    ReplyDelete
  6. kudukka kudadhu engada sonavanukku ondukm kidaikka koodadhu kurippa kilakku maganathil irkindra veri sori kaatikutanvalukku kedikkave koodadhu iringa singalavanukku keela irundu palaunga
    naa unmayana muslim soluranda engada over tullal tuvesakara no1
    tamilar ongaluku totta kattanda neenga matakalapan daa (mata kelapan kitapadupan kitapadutaha kotta pudipan ) apudi patta raskal neengalavl

    ReplyDelete
  7. Muslimgal saarpaha mahindavin pakkam yaar ullar? Musthfavum 2 mazangkalukku munnar vandu serndavar..

    ReplyDelete
  8. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எவ்வித அமைச்சுப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்ற விடயம் விவாதத்திற்குரியதொன்றல்ல. சமூகப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு பணிதான் இருக்கவேண்டும். அப்போதுதான் அப்பணி சிறக்கும். முஸ்லிம் சமூகத்திற்கு அமைச்சுப் பதவி இல்லாவிட்டால் இச் சமூகத்தினை மகிந்தர் கோத்தாபய ஆகியோர் கவனிக்க மாட்டினமோ? சம்பந்தர் மாவை சேனாதிராசா சுமந்திரன் போன்றவர்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இவர்களை விடவுமா அரசியல் வாதிகள் இருக்கின்றார்கள். ஏன் இவர்கள் எல்லாம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் நாட்டம் காட்டவில்லை. அவர்களுக்கெல்லாம் பதவிகளை விட சமூகம்தான் பெரிதாகத் தெரிந்தன. அமைச்சுப் பதவிகளுக்காக தாம் சார்ந்த மதங்களையே மாற்றத்தயாராக இருக்கும் இக்காலத்தில் இவர்கள் எல்லாம் துருவ நட்சத்திரங்கள். முஸ்லிம் சமூகத்தைக் காக்க பாதுகாக்க மகிந்தவும் கோத்தாவும் எங்களுக்குப்போதும். இபபோதைய முஸ்லிம் பாஉ க்கள் இன்னும் பல வருடங்கள் இப்படியே இருந்து சமூகப் பணியினைச் இன்னும் அதிக அதிகமாகச் செய்யப் பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.