முஸ்லிம்களுக்கு கிடைக்கவேண்டிய நலன்களில், பாரிய குறைபாடுகள் ஏற்படலாம்
பொதுஜன பெரமுனவின் ஆதரவு முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் நலன்களை ஒன்று பட்டு பெறுவதுடன் எதிர் வரும் காலங்களில் பெரமுனவுக்கான வாக்குகளை அதிகரிக்க முடியும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் பெரமுனவும் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என நாம் தேர்தல் காலத்திலும் அழைப்பு விடுத்தோம். ஆனாலும் எமது அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாகவே செயற்பட்டனர். இதுவும் மொட்டுக்கான முஸ்லிம்களின் வாக்கு வீதம் குறைந்தமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். சஜித்துடன் இணைந்திருந்த முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாய் ஒரே மேடையில் செயற்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் கவர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசில் அதிகாரம் உள்ள முஸ்லிம்கள் மிக மிக குறைவு. இதன் காரணமாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களில் பாரிய குறைபாடுகள் ஏற்படலாம். இது எதிர் காலத்தில் மேலும் பாதகமாக ஏற்பட்டு மொட்டுவுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு எதிரான முஸ்லிம் கட்சிகளுக்கு மக்கள் வாக்குகளை அதிகரிக்கலாம்.
தற்போது பொதுஜன பெரமுன ஆட்சியில் இருப்பதால் அதனுடன் இணைந்துள்ள கட்சிகள் மூலம் மக்கள் தமது நலன்களை எதிர்பார்ப்பது என்பது யதார்த்தமாகும். அவ்வாறு கிடைக்காத போது பழையவர்கள் பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் செல்வதை தடுக்க முடியாது. அதனால் பெரமுனவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட உலமா கட்சி அழைப்பு விடுக்கிறது. "பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி" என்ற பெயரில் செயல்படுவதன் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை ஒன்றாக இருந்து ஆராய்ந்து அவற்றை அரசுக்கு கொண்டு சென்று தீர்த்து வைக்க இலகுவாக இருக்கும். அத்துடன் சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்குகளையும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும்.
நீங்கள் ஏன் ஒரு தேசியப் பட்டியல் mp ஆக முடியும்தானே.உலமாவே முயற்சி செய்யுங்கள்,அதன் பிறகு ஒரு அமைச்சு பதவியும் கிடைத்தால் உங்கள் காட்டில் அடை மழைதான்
ReplyDeleteAny how Mubarak, you'll get all those requested and anticipated by you! So needn't worry about the community!
ReplyDeleteHe will never get national list MP or ministry - he does not know what to do with it
ReplyDelete