தமிழில் தேசியகீதம் பாட வேண்டாமென, ஜனாதிபதி உத்தரவிடவில்லை - வாசுதேவ
இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டியிருந்தது.
குறித்த செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவியுள்ளார்.
இதற்குப் பதில் வழங்கியுள்ள வாசுதேவ,
புதிய ஜனாதிபதி தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்து எந்தவொரு பணிப்புரையும் விடுக்கவில்லை என்று பதில் வழங்கியதாக தன்னுடைய முகப்புத்தகத்தில் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.
Post a Comment