ராஜிதவை கைது செய்யுமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட சுகாதார அதிகாரிகளை உடன் கைதுசெய்யுமாறு பௌத்த தகவல்கள் கேந்திர நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புற்றுநோய் தொடர்பான ஒளடதங்களை கொண்டுவரும்போது இடம்பெற்றதாக கருதப்படும் சுமார் 3.8 பில்லியன் ரூபா அளவிலான பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில், பௌத்த தகவல்கள் கேந்திர நிலையம் கடந்த 25ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இதற்கமைய, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரான அகுலுகல்லே சிறி ஜினாநந்த தேரர், இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துபோது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட சுகாதார அதிகாரிகளை உடன் கைதுசெய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment