Header Ads



பொதுபல சேனாவை கலைக்க முடியாது - ஞானசாரர் பல்டியடிப்பு

பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசாரர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் வரை பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்து செயற்படும் எனவும், பொதுத் தேர்தலில் அதிகாரம் எவ்வாறு இருக்கும் என்பதில் மிகவும் கண்காணிப்புடன் இருக்கும் எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

பெளத்தம் என்ற பேரில் போலி வேசம் போட்ட, அடிப்படைவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியோர் அவர்களுக்கு உடந்தையாக இருந்தோர், சிங்கள பெளத்த மக்களின் கெளரவத்தை இல்லாதொழித்தோர், மக்களின் உடமைகளைத் திருடியோர்.. அபகரித்தோர்...சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் ஆகியோர் பொதுத் தேர்தலில் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதிலும் மிகவும் அவதானமாக இருப்பதாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டு குண்டர்களைப் பாராளுமன்றிற்கு மீண்டும் சேர்த்துக்கொண்டால் பொதுபல சேனா அமைப்பினைக் கலைக்கவியலாது எனவும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

(கலைமகன் பைரூஸ்) 

2 comments:

  1. நீங்கள் சொல்லும் ரூல் எண்ட் ரெகுலேசன் படி பார்த்தால் பாராழுமன்ரில் தற்போது இருப்பவர்களின் சுமார் 85% மானோர் மீண்டும் அங்கே செல்ல தகுதியை இழப்பார்கள்.ஆனால்

    ReplyDelete

Powered by Blogger.