பௌத்தத்திற்கு அச்சுறுத்தல் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்கள்
(நா.தனுஜா)
நாட்டில் சிங்கள பௌத்தத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எதிரணியினரால் மாயை ஒன்று உருவாக்கப்பட்டு, அதனூடாக அவர்கள் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் இனவாதத்தை முன்நிறுத்தி நாட்டில் தொடர்ந்தும் சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுக்க முடியாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவில் இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் களத்தில் ஜெயித்தார் கோத்தபாய அவர்கள்.இனிமேல் நிச்சயம் அவர் நேர்வழி செல்வார்.நீங்கள் போன பஸ்ஸுக்கு கை காட்ட வேண்டாம்.
ReplyDeleteWhat is the way out for this predicament.
ReplyDelete