“பிரபாகரனுக்கு பின், கோட்டாபயவிற்கே நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை உள்ளது” - ரிஷி செந்தில்
நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழர்கள் முதன் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அவதானித்ததாகவும், அதன் பின்னர் நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஆளுமையை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடமே அவதானிப்பதாகவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ் தெரிவிக்கின்றார்.
அத்துடன், சர்வதேச நாடுகளுக்கு இணையாக நாட்டை கட்டியெழுப்பும் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அரசியல் அனுபவங்கள் இல்லாமையினால், நிர்வாக அதிகாரி என்ற விதத்தில் புதிய சிந்தனைகளுடனும், பாரம்பரிய அரசியல் முறைமைக்கு அப்பாற் சென்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான இயலுமை அவரிடமே காணப்படுவதாக ரிஷி செந்தில்ராஜ் குறிப்பிடுகின்றார்.
Post a Comment