"சுமங்கல தேரரின் உண்ணாவிரதத்தை, சீர்குலைக்க முயலுவதாக குற்றச்சாட்டு"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கா பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை கோத்தாபயவின் ஆதரவாளர்கள் கலைக்க முற்பட்டதாக குறிப்பிட்டு அவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
சுதந்திர சதுக்கத்தின் முன்பாக இன்று இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100 பேர் வரை இணைந்துக் கொண்டுள்ளனர்.
இதன்போது இவர்கள் கோத்தாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்குமாறும், இந்விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பதாகவும் என்று எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்திருந்தனர். இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நபர்களுள் ஒருவரான நாமல் விஜயமுனி சொய்ஸா என்பவர் கருத்து தெரிவித்தார்.
இன்று(நேற்று) நாங்கள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்தற்காகவும் , கோத்தாபயவிடம் எமக்கிருக்கும் தனிபட்ட முரண்பாட்டின் காரணமாகவும் இங்கு வரவில்லை. ஜனாதிபதி வேட்பாளருக்கான முதல் தமைதான் அவர் இந்நாட்டு பிரஜையாக இருக்க வேண்டும் என்பது. இதனை அவர் உறுதிபடுத்தாமல் தேர்தலில் போட்டியிடுவதானது ஏனைய வேட்பாளர்கள் 34 பேரை மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கும் செயலாகும்.
Post a Comment