புதிய அரசாங்கமும் பாடசாலை சீருடைகளுக்கான, வவுச்சர்களை விநியோகிக்க திட்டம்
2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கான போதிய காலம் இன்மையால் புதிய வருடத்திற்கான சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கு பதிலாக வுவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம், முதல் வாரத்திற்குள் நிறைவுசெய்யப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் தனியார் பாடசாலை மாணவர்களுக்கு ஏன் பாரபட்சம் அவர்கள் மாணவர்களில்லையா
ReplyDelete