Header Ads



நான் வடமாகாண ஆளுநர் இல்லை - மறுக்கிறார் முரளிதரன்

வட மாகாண ஆளுநர் பதவிக்கு முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட உள்ளதாக சில சமூகங்களிலும் இணைய தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் முரளிதரனை எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நீண்ட காலமாக மக்களுக்கு சேவைகளை ஆற்றி வருவதாகவும், பதவிகளைப் பெற்றுக் கொண்டுதான் சேவையாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.