Header Ads



பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதியும், டெப் வழங்குதலும் இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கு டெப் (Tab) வழங்குதல் மற்றும் சுரக்ஷா காப்புறுதி ஆகிய செயற்றிட்டங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்,  தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக, இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்போது, கடந்த அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு டெப் (Tab) வழங்குதல் மற்றும் சுரக்ஷா காப்புறுதி ஆகிய செயற்றிட்டங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த இரண்டு செயற்றிட்டங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.