Header Ads



இவனை ஞாபகமிருக்கிறதா...?


ஜனாதிபதியையும், கோட்டபாயவையும் கொலை செய்வதற்கு, சதி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார்.

அதன் பின்னணியில் ரணில் இருப்பதாக சொன்னார். இந்த சதியை திட்டமிடுவதாக நாமல் குமார விரல் காட்டிய பொலிஸ் பெரியவரை உள்ளே தள்ளி விசாரணைகள் நடந்தன.

இங்கு குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் பெரியவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான விசாரணைகளை பொறுப்பேற்று நடத்திவந்தவர்.

பிரதமர் ரணில் தன்னை கொலை செய்யப்போகிறார் என்ற கயிற்றை விழுங்கிய ஜனாதிபதி பிரதமரை பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைப்பதை தவிர்த்தார்.

உயிர்த்த ஞாயிறன்று குண்டுகள் வெடித்தன.

பாதுகாப்பு அமைச்சரும், நாட்டின் ஜனாதிபதியுமான சிரிசேன நாட்டில் இருக்கவில்லை.

குண்டு வெடிப்பின் மறுதினமே, கோட்டா நாட்டைப்பாதுகாக்க தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

குண்டு வெடிப்பை தொடர்ந்து முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள்.

குருணாகல் பகுதியில் இந்த தாக்குதலில் தொடர்புபட்ட சிலரை பொலிஸ் கைது செய்திருந்த போது, சுதந்திர கட்சி செயலாளர் தயாசிறி அவர்களை விடுவித்து தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போனார்.

தயாசிறியோடு, இந்த நாமல் குமாரவும் அந்த கலவர களத்தில் இருந்தார்.

பிறகு குருநாகல் கலவர சூத்திரதாரிகள் கைதான போது, நாமல் குமாரவையும் உள்ளே தள்ளினார்கள்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் கழுத்தில் பென்டேஜ் அணிந்த நிலையில் ‘ஜனாதிபதி கொலை முயற்சி’ சதியில் நாமல் குமாரவால் விரல் நீட்டப்பட்ட பொலிஸ் பெரியவர் சாட்சியம் அளித்தார்.

அவரது சாட்சியத்தில் கசப்பான பல உண்மைகள் வெளிவந்தன.

மீண்டும் ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.

சிந்திப்போருக்கு இதில் பல படிப்பினைகள் உண்டு.

Mujeeb Ibrahim

2 comments:

  1. இவையெல்லாம் பின்னிருந்து இயக்கவர்கல் யார் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்.இந்த கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்தால் புரியும்.இதை சிங்களத்தில் மொழி பெயர்த்தால் நன்ராக இருக்கும்.திரு.முஜீப் முயற்ச்சி செய்து சிங்களத்தில் சமூக வலைத்தளங்களில் இடுகை இடுங்கல் அதிகமான மக்களுக்கு இன்னும் புரியும்.

    ReplyDelete
  2. சதிகாரர்களுக்கெல்லாம் மகா சதிகாரனான அழ்ழாஹ் பொறுப்பெடுக்குமளவிற்கு எமது ஈமான் அமல்கள் சீராகிவிடுமானால் மிக விரைவில் இவர்களனைவர்களும் மிகமோசமாக கேவலப்பட்டு அழிவதை காணலாம்

    ReplyDelete

Powered by Blogger.