"பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்வோம்"
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கி அவர் அரசியலில் ஈடுபடுவார் எனவும் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை மிகவும் அர்த்தமுள்ளதாக முன்னோக்கி கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருவரா, இல்லையா என்பதை கூற முடியாது.
ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதாக கூறி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்ட சிலர் பல்வேறு வேலைகளை செய்தனர். இதற்கு மக்கள் சிறந்த பதிலை வழங்கியுள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் போது மிகவும் வெளிப்படை தன்மையுடன் அதனை மேற்கொள்வோம். சம்பந்தப்பட்டவர்கள் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment