Header Ads



கல்முனையின் சகல விடையங்களையும் ஹரீசிடம், ஒப்படைப்பதாக சஜித் வாக்குறுதி


- பாறுக் ஷிஹான் -

தண்ணீர் கேட்ட மக்களை சுட்டு கொன்றவர் கோட்டாபய ராஜபக்ச இன்று இரவில் தூங்க முடியாது  தவிக்கிறார் .  சுட்டவர் சிறையில் இருக்கிறார் சுட சொன்ன வெளியில் சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார். 1000 மேல் லெப்டினன் ஜெனரல்  ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள் அனைவரையும் சனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியுமா?  என கேள்வியெழுப்பினார்.  
 புதிய ஜனநாயக முன்னணியின் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 

வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய சானாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கல்முனை பிரதேச அபிவிருத்தி உட்பட அனைத்து விடையங்களையும் தனது ஆட்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் .ஹரீஸ் அவர்களிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதிகளை வழங்கினார்.

ஒளி வீசும் நகரமாக மாற்றியமைப்பதோடு புதிய வியாபார கட்டிட தொகுதியையும் அமைத்து தருவதாக தெரிவித்தார். கல்முனை , நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு ,மருதமுனை உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களும் பாரிய அபிவிருத்திகளை பெறும் பாஷை புரியாவிட்டாலும் அனைத்தையும் கையேட்டில் குறித்து வைத்துள்ளேன் 17ம் திகதி வேலைகளை தொடங்குவதற்கு .
கல்முனைக்கும் பிரேமதாச குடும்பத்திற்குமான உறவு இன்று நேற்றயதல்ல . ரணசிங்க பிரேமதாச முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்களுடைய காலத்திலிருந்து இன்றுவரை அந்த உறவு இருக்கின்றது.

வடகிழக்கு மாத்திரமல்ல முழு இலங்கையிலும் ஒரு விடையம் நடக்கிறது அதுதான் முஸ்லிம்களிடம் சென்று தமிழர்களை போட்டு கொடுப்பதும்,தமிழர்களிடம் போய் முஸ்லிம்களை போட்டு கொடுத்து பிரச்சினையை உட்டாக்குவதும் ,சிங்களவர்களின் போய் தமிழர்களை போட்டுக்கொடுக்கின்ற வேலையைத்தான் எதிரணியினர் செய்து வருகின்றனர். இது குடும்ப ஆட்சிமுறையை தக்க வைத்து கொள்ளவே இந்த நடவடிக்கை அரங்கேற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

அளுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் பள்ளிவாசல்களை உடைத்தவர்கள் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வந்து அந்தப் பிரதேசத்திற்கு தீர்வினை பெற்று தருவதாக கூறுகின்றனர் . அங்கு பள்ளிவாசலை உடைத்தார்கள் சாய்ந்தமருதிற்கு எவ்வாறு தீர்வினை பெற்று தருவார்கள் என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கின்றேன் .
அதே போன்று கல்முனைக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றும் ,முஸ்லிம்களுக்கு ஒன்றுமாக அவர்கள் பேசி திரிகிறார்கள்.இவர்களிடம் என்ன தீர்வு இருக்கிறது.

நானே கல்முனைக்கு வந்து சிறப்பான தீர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன் சஜித் பிரேமதாசவை விசுவாசியுங்கள் என தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர்,பிரதி முதல்வர்  , மாநகரசபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் , பொதுமக்களும் கலந்துகொண்டனர் .

No comments

Powered by Blogger.