கோத்தாவுடன் இணைந்து, பணியாற்ற விருப்பம் - அமெரிக்கா
சிறிலங்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு வலுவான, இறையாண்மை கொண்ட சிறிலங்காவுக்காக, நல்லாட்சி, பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகளின் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பிரச்சினைகளில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.
ஜனநாயக ரீதியான தேர்தலை எதிர்கொண்ட சிறிலங்கா மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.
Post a Comment