Header Ads



பயப்பட அவசியம் இல்லை, சமாதானத்தை குழப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்

சமாதானத்தை குழப்பும் எவர் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொதுமக்கள் எவ்வித வன்முறை பயமும் இன்றி நாளாந்த கடமைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வன்முறைகள் இடம்பெறும் என்ற பயம் இருந்தது.

எனினும் அவ்வாறு பயப்பட அவசியம் இல்லை என்றும் கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.