மஹிந்த தேசப்பிரிய பதவி விலக கூடாது - சபாநாயகர்கரு ஜயசூரிய
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தற்போது பதவி விலகுவது சிறப்பானதாக அமையாது என சபாநாயகர்கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மகிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே, சபாநாயகர்கரு ஜயசூரிய இதனை வலியுறுத்தியுள்ளார். அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த தேர்தல்களின் போது மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு மகத்தான சேவையை ஆற்றியிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் தேர்தர்களிலும் மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவையை அத்தியாவசியமாக இருக்கின்றது.
மஹிந்த தேசப்பிரிய தற்போது பதவி விலகுவது சிறப்பானதாக அமையாது. ஆகையினால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை அவர் தொடர வேண்டும்” என சபாநாயகர்கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment