இனவாத வன்செயல்களை இயக்கியவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதா...?
கடந்த கால இனவாத வன்செயல்களின் பின்னணியில் இருந்து இயக்கியவர்களிடத்தில் ஆட்சியை ஒப்படைத்தால் எவ்வாறான பாரதூரமான விளைவுகளுக்கு சமூகம் முகங்கொடுக்க நேரிடும் என்பதைப் பற்றி சிந்தித்து, அவற்றிலிருந்து விடுபடுவதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் தேர்தல் பிரசார கூட்டம் திகாமடுல்லை மாவட்டத்தில் வரிப்பத்தான்சேனையில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பழைமை வாய்ந்த கொள்கையுடன், இனியும் புரட்சிகரமாக பயணிக்க முடியாது என விலகிச் சென்றவர்கள் பலரும் இப்போது அக்கட்சிக்கு மீண்டும் வருகை தந்துள்ளார்கள். அவ்வாறே முஸ்லிம் காங்;கிரஸில் இருந்து விலகிச் சென்றவர்கள் பலரும் மீண்டும் கட்சியுடன் வந்து இணைந்துள்ளார்கள்.
ஏனென்றால்; எமது இளம் ஜனாதிபதி வேட்பாளரது ஆளுமை அவர்களுக்கு புதியதோரு நம்பிக்கையும், உற்சாகத்தையும் ஊட்டியுள்ளது. இரவும் பகலும் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவராகவும், நேர்மையான தலைவராகவும் அவர் திகழ்வதால் மக்கள் அவரை ஆர்வத்துடன்; ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் கடந்த சில வருடங்களாக நாம் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு எமக்கு மாற்றுத் தெரிவுகள் இருக்க முடியாது. எதிரணியிலுள்ள இனவாத கும்பலின் சுயரூபத்தை பார்க்;கின்ற போது மிகக் கவனமாகவும் பக்குவமாகவும் இந்தத் தேர்தலை அணுக வேண்டியுள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு பிறகு முஸ்லிம்களை படுமோசமாக விமர்சிக்கின்றனர். மிகவும் ஆழமாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே இது அமைகின்றது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் மொட்டுக் கட்சியுடன் சங்கமித்து, இரண்டறக் கலந்து ஒரே மேடையில் ஒன்றாக நிற்கின்றனர்.
எங்களுடைய அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை எண்ணி நாங்கள் விசனப்படுகின்றோம். முஸ்லிம்கள் தான் தங்களை ஆட்சியிலிருந்து விரட்டியடித்தனர் என்பதற்காகவே எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்களையே இந்த அரசாங்கத்தை வெறுக்க வைப்பதற்காக இவை அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாடகங்களாகும்;.
ஆனால், நாங்கள் அரசாங்கத்தில் இருந்துகொண்டு சும்மா இருக்காது அன்று அம்பாறை இன வன்செயலில் கும்பலில் ஈடுபட்ட ஏராளமானவர்களை கைது செய்யவைத்தோம். பிணை வழங்காமல் அவர்களை மாதக் கணக்கில் அரசாங்கம் சிறையில் வைத்தது. சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தோம்.
அதேபோல் திகனயில் கலவரம் செய்த 150க்கும் மேற்பட்டவர்கள் சிசிரீவி கெமராக்களின் மூலம் அடையாளம் காணப்பட்டு ஊர் ஊராக தேடிச் சென்று கைது செய்யப்பட்டார்கள். அரசாங்கமும் அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு தொடர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் தவித்த கும்பல் வாக்கெடுப்பை தடுப்பதற்காக செய்த அட்டூழியங்களை எனது 25 வருட அரசியல் வாழ்க்கையில் நான் அனுபவித்ததே இல்லை. ஆட்சியை பின்கதவால் வந்து பிடித்தவர்கள் தான் இப்பொழுது முன்கதவால் ஆட்சியை அடைய எத்தனிக்கின்றார்கள். இவர்களிடத்தில் ஆட்சியையும் பெரும்பான்மையையும் ஒப்படைத்தால்; இன்னும் என்னவெல்லாம் நிகழும் என்பதை எண்ணிப் பார்க்கN முடியாது.
மாயக்கல்லி மலை விவகாரத்தை எடுத்துகொண்டால் எவ்வாறு அந்த கும்பல் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். அப்பொழுது நாங்கள் எதிர்கட்சியில் இருந்துகொண்டு களத்தில் இறங்கி போராடினாலும், எதுவும் செய்துகொள்ள முடியாமல் போனது. அந்தக் கும்பல் இப்பொழுது ஆட்சியை கைப்பற்றினால் இறக்காமம் மற்றும் வரிப்பத்தான்சேனை பிரதேசங்களில் புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் ஆபத்து நிலவுகின்றது. அப்பிரதேசம் முழுவதுமாக பறிபோகின்ற நிலவரம் உருவாகி ஆக்கிரமிப்புக்குள்ளாக நேரிடும். அதை தான் எங்களால் தடுக்க முடியாவிட்டாலும், அது மேலும் வியாபிப்பதற்கு இடமளிக்காமல் தடுக்க எத்தகைய ஆட்சியாளர்களின் கீழ் அதற்கு எதிராக போராட முடியும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
இன்று ஆட்சிக்குள் இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரம் கூட அந்த கும்பலின் ஆட்சியில் இல்லாமல், நாங்கள் வெறும் கையாளாகாத போடுகாய்களாகப் போய்விடுவோம். எம்மை சூழவுள்ள பல பிரச்சினைகள் நீண்ட காலமாக தீராமல் இருந்து வருகின்றன. எத்தனையோ விவசாயிகள் இன்றும் கஷ்டப்பட்டுகொண்டிருக்கின்றார்கள். அவர்;களது பிரச்சினைகளுக்கான முடிவை காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹிங்குரான கரும்பு செய்கையில் தனியார் நிறுவனமொன்று பலவந்தமாக தலையிட்டு அவர்களின் வருமானத்தை சூறையாடிக் கொண்டிருந்தது. இவற்றை தீர்த்து வைக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளோம். நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளார்.
எதிரணியின் பொய்யான பிரசாரங்களை தகர்தெறிந்து எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் இந்நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வெற்றிவகை சூடுவார்; என்பதற்கான சகல சமிஞ்சைகளும் போகின்ற இடங்களில் தெரிகின்றது. நிகழவுள்ள இந்த யுக மாற்றத்தை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது.
நான் பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக பொய்யான வதந்தியை பரப்பி என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக தனியார் தொலைக்காட்சி ஊடகங்கமொன்றுக்கெதிராக வழக்கு தொடரவுள்ளேன். இந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஊடக தர்மத்தை மீறியுள்ளது. இதன் மூலம் வாக்குகளை சிதறிடிப்பதற்கு சதி செய்யப்படுகின்றது. இதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்த சதிகளை முறியடித்து வரப்போகின்ற பேராபத்திலிருந்து சிறுபான்மை மக்களை காப்பாற்ற வேண்டியுள்;ளது. ஏனெனில், நாட்டில் அவ்வப்போது அவர்களாகவே கலவரங்களை திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்டு எத்தனை முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தார்கள்? சமூகத்தில் நெருக்கடிகள் எழும்போது எத்தனை பேர் முன் வந்து போராடுகின்றார்கள் என்பதை காண்டறியவே இவ்வாறான வன்செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் இருந்து இயக்கியவர்களிடத்தில் ஆட்சியை ஒப்படைத்தால் எவ்வாறான பாரதூரமான விளைவுகளுக்கு எமது சமூகம் முகங்கொடுக்க நேரிடும் என்பதை நன்றாகச் சிந்தித்து, அவற்றிலிருந்து விடுபடுவதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
மக்கள் எல்லோரும் வந்தபின்னர் மஹிந்தவை பிரிய முடியாமல் காலைக்கையைப்பிடித்து மன்றாட்டம் நடத்தி இரவோடு இரவாக வந்த சா நக்கிய தலைவரின் பேச்சு வடிவேல்ற கதை மாதிரி இருக்கே
ReplyDeleteAveru nakka solla neeka kuda nakkinikala mo... lafir
ReplyDelete