தேசப்பற்றுக்குக் கிடைத்த, வரலாற்று வெற்றி
தேசப்பற்றுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியில் குறுகிய வேறுபாடுகளை மறந்து சகல முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும். - தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பெரும்பான்மை சமூகத்தின் விருப்புக்கள்,அபிலாஷைகளுக்கு இணங்கிச் செல்வதே
சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்கும். பயங்கரவாதம் முடிந்தகையுடன் பிரிவினைவாதங்களும் தோற்றுவிட்டன.
இந்த யதார்த்தத்தை உணர்ந்தே சிறுபான்மையினரை வழிநடத்த வேண்டியுள்ளது.இந்நிலையில் சிறுபான்மைச் சமூகங்களை வழிநடத்தும் சில அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் எமது சமூகங்களை தவறாக வழிநடத்துவது கவலையளிக்கிறது.2005, 2010, 2015 மற்றும் இம்முறையும் கூட எமது சமூகங்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளன.
அதிகாரத்தை மாத்திரம் இலக்கு வைத்து முடிவுகள் எடுப்பதாலே நாம் பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே இக்கள நிலவரங்களிலிருந்து நாம் விடுபட எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும்.இதுவே பிரிவினைகளைத் தோற்கடித்து தேசப்பற்றைக் கட்டியெழுப்புவதற்கான வழியென்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் தேசிய காங்கிரஸின் தலைமையில் அணிதிரண்டு வாக்களித்த சகலருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
Post a Comment