"எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பலத்தை பெற மாட்டார்கள்"
ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பலத்தை பெற மாட்டார்கள் என சர்வதேச கண்காணிப்பில் தெரிய வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தலில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ள மாட்டார் என சர்வதேச கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
கொழும்பில் செயற்படும் பல நாடுகளின் தூதரகங்கள், சர்வதேச ஆய்வு நிறுவனம் ஊடாக கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டிருந்தன.
புதிய கருத்துக் கணிப்பு அறிக்கை நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. அதற்கமைய பிரதான வேட்பாளர்கள் இருவரும் 50 வீததத்திற்கு அதிக வாக்குகளை பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அறிக்கை வெளியாகும் சந்தர்ப்பம் வரை கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாஸவை விட சற்று முன்னிலையில் இருந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் இரண்டாம் விருப்பம் தொடர்பில் இந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை விட சஜித் பிரேமதாஸ சற்று முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment